fbpx
உங்களை ஊக்குவிக்கும் வலைத்தளத்திற்கு வரவேற்கின்றோம்!

Tamil Motivational short story

hd imgae-motivational tamil dialogue

வாழ்க்கையில் முன்னேற வேண்டும்

வெற்றி பெற வேண்டும் என்றும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றும் ஆசை எல்லோருக்கும் இருக்கும்... ஆனால் ஒரு சிலர் அதற்கான முயற்சியை எடுப்பதில் தான் சோம்பேறித்தனமாக அமர்ந்திருக்கிறோம். எதை செய்தாலும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று நாம் இன்றை இழந்து கொண்டிருப்பதால் தான் பல தோல்விகள் நம்மை விட்டுப் போவதற்கு அடம்பிடிக்கிறது. நமக்குள் எல்லா சக்தியும் இருக்கிறது. எதுவும் செய்ய முடியாதவர்கள் என்று யாருமே கிடையாது. நாம்தான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் யோசித்துக் கொண்டே இருக்கிறோம். நம்மைப் போல இருக்கும் இன்னொருவர் நாம் யோசித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் அங்கே சாதித்து விடுகிறார். அவர்களும் நம்மை போல மனிதர்கள் தானே! அவர்களால் செய்ய முடிவது ஏன் நம்மால் செய்ய முடிவது இல்லை இதை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் எப்போதுமே நாம் அப்டேட் ஆக இருக்க வேண்டும் புதுமைகளை கற்றுக் கொள்ள வேண்டும் புதுமைகள் தான் நம்முடைய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எந்த இடத்திலும் பல விஷயங்கள் தெரிந்தவர்கள் தான் அங்கு தலை நிமிர்ந்து நிற்க முடியும். படித்து பட்டம் பெற்று இருந்தாலும் தற்போது சூழ்நிலையில் இருக்கும் அட்வான்ஸ் தொழில்நுட்பங்கள், செயல்பாடுகள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. அதை நாம் கற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டவே கூடாது. தேவையில்லாமல் நம்முடைய பொன்னான நேரத்தை தூங்கிக் கழிப்பதிலும், சோம்பேறித்தனமாக இருக்கும் போது சில தேவையற்ற பொழுது போக்கிலும் நம்முடைய நேரத்தை செலவழித்து விட்டு, தேவையான விஷயத்தை எனக்கு தெரியாது என்று தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை எல்லாம் கூறிக் கொண்டிருக்கிறோம். அதை மாற்றிக் கொள்வதற்கு தான் உங்கள் மனதை பக்குவப்படுத்த வேண்டும்

எங்கள் இணையதளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி!
asquarelife

FREE
VIEW