fbpx

chennai food fastivel 2024

அனுமதி இலவசம்.

சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா 2024

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் நடத்தும் உணவுத் திருவிழா சென்னை மெரினா கடற்கரையில் இன்று தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு சத்தான, சுகாதாரமான, பாரம்பரிய உணவுகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. இங்கு மொத்தம் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 65 சுயஉதவி குழுக்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயாரித்து வழங்குகின்றனர்.

மேலும் இந்த உணவுத் திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 45 வகையான கைவினைப்பொருட்கள் மூன்று ஸ்டால்களில் கிடைக்கும். டிசம்பர் 21 முதல் 24 வரை மதியம் 12:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் மக்கள் இங்கு செல்லலாம். அனுமதி இலவசம்.

உணவு வகைகள் என்ன ? என்ன??

chennai food festival menu

கோவை கொங்கு மட்டன்‌ பிரியாணி,

கிருஷ்ணகிரி நோ ஆயில்‌ நோ பாயில்‌,

களூர்‌ தோல்‌ ரொட்டி – மட்டன்‌ கிரேவி,

நாமக்கல்‌ பள்ளிப்பாளையம்‌ சிக்கன்‌,

தருமபுரி ரவா கஜூர்‌,

நீலகிரி ராகி களி – அவரை குழம்பு,

திருப்பூர்‌ முட்டை ஊத்தாப்பம்‌,

காஞ்சிபுரம்‌ கோவில்‌ இட்லி,

சிவகங்கை மட்டன்‌ உப்புக்கறி,

புதுக்கோட்டை சுக்குமல்லி காபி,

ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி,

வேலூர்‌ ராகி கொழுக்கட்டை,

மதுரை கறி தோசை,

விருதுநகர்‌ கரண்டி ஆம்லெட்‌,

தஞ்சாவூர்‌ பருப்பு உருண்டை குழம்பு,

திருச்சி நவதானிய புட்டு,

மயிலாடுதுறை இறால்‌ வடை,

நாகப்பட்டிணம்‌ மசாலா பணியாரம்‌,

கன்னியாகுமரி பழம்‌ பொறி,

சென்னை தயிர்‌ பூரி உள்ளிட்ட 100க்கும்‌ மேற்பட்ட உணவு வகைகள் உள்ளன.

65 சுய உதவிக்‌ குழுக்களைச்‌ சேர்ந்த 150க்கும்‌ மேற்பட்ட மகளிர்‌ உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில்‌ பரிமாறும்‌ வகையில்‌ 35 அரங்குகள்‌அமைக்கப்பட்டுள்ளன.

67 வகையான ரெடி டூ ஈட் உணவுப்பொருட்கள்

உடனடியாக சமைப்பதற்கும்‌ மற்றும்‌ உண்ணுவதற்கும்‌ ஏற்ற உணவு வகைகளான அரியலூர்‌ வறுத்த முந்திரி, செங்கல்பட்டு நாட்டுச்சர்க்கரை எள்ளுருண்டை, சென்னை வேர்க்கடலை நெய்‌ லட்டு, கருப்பு கவுனி அரிசி லட்டு, கோவை பீட்ரூட்‌ மால்ட்‌ பொடி, கடலூர்‌ சங்குப்பூ சர்பத்‌, தருமபுரி குதிரைவாலி ரோஸ்‌ லட்டு, திண்டுக்கல்‌ காராபூந்தி, ஸ்ரீவில்லிப்புத்தூர்‌ பால்கோவா, காஞ்சிபுரம்‌ முட்டை மிட்டாய்‌, சேலம்‌ ஆட்டையாம்பட்டி முறுக்கு, கரூர்‌ பாசிப்பருப்பு உருண்டை, கிருஷ்ணகிரி மசாலா தட்டுவடை, மதுரை தொத்தல்‌, நாகப்பட்டிணம்‌ சுண்டைக்காய்‌ வத்தல்‌, நீலகிரி ஸ்ட்ராபெர்ரி ப்ளூபெர்ரி, ராமநாதபுரம்‌ லோத்தல்‌, தென்காசி தேன்‌ நெல்லி, திருநெல்வேலி அல்வா. தூத்துக்குடி உடன்குடி கருப்பட்டி, திருச்சி மணப்பாறை முறுக்கு, திருவண்ணாமலை சிமிலி உள்ளிட்ட 67 வகையான தயார்‌ நிலை உணவுப்‌ பொருட்களை விற்பனை செய்திட 6அரங்குகள்‌ அமைக்கப்பட்டுள்ளன.

மேலும்‌ பல்வேறு மாவட்டங்களைச்‌ சேர்ந்த சுய உதவிக்‌ குழுக்கள்‌ உற்பத்தி செய்த கைவினைப்‌ பொருட்கள்‌ உள்ளிட்ட 45 வகையான பொருட்கள்‌ 3 அரங்குகளில்‌ விற்பனை செய்யப்பட உள்ளன.


உணவுத் திருவிழாவுக்கு வரும் மக்களின் வசதிக்காக சென்னைப் பல்கலைக் கழகம், லேடி விலிங்டன் கல்லூரி, ராணி மேரி கல்லூரி வளாகங்களில் வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

asquarelife

FREE
VIEW